Sports
அப்படியே மாமனை போலவே இருக்கிறார்..! பாகிஸ்தான் வீரரின் செயலால் இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் இன்று மோதின. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அல்லது இந்திய அணியை பாகிஸ்தான் சந்திக்கவுள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷகீன் அப்ரிடி ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அங்கிருந்த இந்திய ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அப்ரிடியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். களத்துக்கு வெளியே இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் என்னதான் மோதிக்கொண்டாலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் நல்ல நட்புணர்வோடுதான் இருந்து வருகின்றனர்.
நேரில் சந்தித்தால் நட்பான சிரிப்பது மற்றும் மகிழ்ச்சியாக பேசிக்கொள்வது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் 34 வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலிக்கு லெஜண்ட் என குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரர்கள் வாழ்த்து தெரிவித்ததை இரு நாட்டு ரசிகர்களும் கொண்டாடினர்.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி இந்திய கொடிக்கு முன்னதாக புகைப்படம் எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரலானது. தற்போது ஷாஹித் அப்ரிடியின் மகளை திருமணம் செய்யப்போகும் ஷகீன் அப்ரிடி இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!