Sports
எங்க நாட்டுக்கு வந்தவங்கள வெறுமையாக அனுப்புவோமா..அதான் கோப்பையோடு அனுப்பினோம்- தோல்வி குறித்து பாக்.பதில்
கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு செல்ல சர்வதேச கிரிக்கெட் அணிகள் தயங்கிவந்தது.
அதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான் பல் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவந்தது. அதன்பலமான ஜிம்பாப்பே , மேற்கு இந்திய தீவுகள் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடினர். இதனால் பாகிஸ்தான் மீது நம்பிக்கை வைத்து 2017-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு விளையாட சென்றது.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று 7 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 6 போட்டிகளில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருக்க, இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை மிக எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்த தோல்வி குறித்து பல்வேறு பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் "17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியினர் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை எப்படி வெறும் கையுடன் அனுப்புவது? அதனால்தான் கோப்பையோடு வழி அனுப்பி வைக்கிறோம்.
ஆனால் இதை தவிர்த்து உண்மையாகவே அவர்கள் மிகச் சிறந்த அணி. இந்த தொடரில் கடைசி இரண்டு போட்டிகளை தவிர பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது பயணம் பாதுகாப்பாக அமையட்டும்" என்று கூறியுள்ளார். .
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!