Sports
”தோல்வி கிடக்கட்டும், முதலில் இதற்கு விளக்கம் கொடுங்கள்” -BCCI-யின் ஆவேசமாக கேள்வி எழுப்பிய கவாஸ்கர் !
2022 ஆசிய கோப்பையில் மோசமாக விளையாடி தோல்வியடைந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஃபார்ம் பெரும் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஃபின்ச் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியாவின் சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
பேட்டிங்கில் பிரச்னைகள் இல்லை என்றாலும் பந்துவீச்சில் நிறைய பிரச்னைகளை சந்தித்தது இந்திய அணி. அதனால் அவ்வளவு பெரிய ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியமால் தோற்றது. சிறப்பாக செயல்பட்ட கேமரூன் கிரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். அதேபோல் மாத்யூ வேட் 21 பந்துகளில் 45 அடித்து 4 பந்துகள் மீதம் இருக்கும் போது ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடிய கேமரூன் கிரீன் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து 4 பௌண்டரிகள் அடித்தார். தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லில் மீண்டு வந்த உமேஷ், ஒரே ஓவரில் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் இருவரையும் அவுட்டாக்கினார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீசிய அவர், 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், அந்தத் தொடரில் இடம் பெறாத உமேஷ் யாதவைப் பயன்படுத்திவிட்டு, ரிசர்வ் வீரராக இருக்கும் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கொடுக்காதது பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆசிய கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சஹார் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடினார். இந்த விஷயம் பற்றி இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் தன்னுடைய விமர்சனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
"இந்திய அணி தீபக் சஹாரை பிளேயிங் லெவனில் சேர்க்கமால் உமேஷ் யாதவை எடுத்தது பற்றி சரியான விளக்கம் கொடுகக்வேண்டும். தீபக் சஹார் இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். ஆனால் உலகக் கோப்பை போன்ற ஒரு மிகப் பெரிய தொடருக்குச் செல்லும் முன் அவருக்கு சில போட்டிகள் ஆடிய அனுபவம் தேவை. உலகக் கோப்பையின்போது யாருக்கேனும் காயம் ஏற்பட்டு ரிசர்வ் வீரர் தீபக் சஹாரை விளையாட வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர் அப்போது சிறப்பாக செயல்படாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் இந்த கேள்விக்கு சரியான விளக்கத்தை இந்திய அணி அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறவேண்டும். தீபக் சஹாருக்கு காய்ம் ஏற்பட்டிருந்தாலே ஒழிய, உமேஷ் யாதவை பயன்படுத்தியதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது" என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!