Sports

22வது காமன்வெல்த் தொடர்.. 22 தங்கம் வென்று அசத்திய இந்தியா : புள்ளி பட்டியலில் 4வது இடம்!

22வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா நடைபெறுகிறது.

இந்த காமென்வெல்த் தொடரில் 106 ஆண்கள், 104 பெண்கள் என 210 இந்திய வீரர்கள் 17 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 22 தங்கம், 16 வெள்ளி, 61 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை இந்தியா வென்று புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.

மல்யுத்த போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அதேபோல் பேட்மிண்டன் பிரிவில் பி.பி. சிந்து, லக்ஷ்யா சென் ஆகியோர் தங்கம் வென்றனர். இரட்டையர் ஆண்கள் பிரிவில் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி தங்கப் பதக்கம் வென்றனர்.

அதேபோல் பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

மற்றொரு தமிழ்நாட்டு வீரரான சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல் ஹக்கியில் இந்திய ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

1934ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்று வருகிறது. 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றபோது 26 தங்கத்துடன் 66 பதக்கங்களை இந்தியா பெற்று 3வது இடம் பிடித்த. இந்த முறை கடந்த ஆண்டை காட்டிலும் தங்கத்தில் 4, வெள்ளியில் 4 பதக்க எண்ணிக்கை குறைத்துள்ளது.

ஆனால் வெண்கலத்தில் 3 எண்ணிக்கை கூடியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பதக்கங்களைப் பார்க்கும்போதும் கூட 5 பதக்க எண்ணிக்கை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'Chess Olympiad.. நாளை நிறைவு விழா..' வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குவது யார் ?