Sports
chess olympiad : வெளிநாட்டவரை தோற்கடித்த 7 வயது சிறுமி ! - அரசு பள்ளி மாணவியால் நெகிழ்ச்சி !
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி 3 ஓபன் பிரிவுகளிலும், 3 பெண்கள் பிரிவுகளிலும் போட்டியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், செஸ் போட்டியை காண நேரில் வரும் பார்வையாளர்கள் செஸ் விளையாடும் விதமாக, செஸ் விளையாட்டு அரங்கிற்கு வெளியே பெரிய செஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர முடியும்.
அந்த வகையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலுள்ள 7 வயது அரசு பள்ளி மாணவி சர்வாணிக்கா, இந்த போட்டியை காண வந்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் போர்டை பயன்படுத்தி அவர் விளையாடியுள்ளார். இதனை அங்கிருந்த பார்வையாளர்களுடன் பார்வையாளராய் வெளிநாட்டு தூதுக்குழு தலைவர் ஒருவர், சிறுமியுடன் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அப்போது 7 வயது சிறுமி காய்களை மிக நேர்த்தியாக நகர்த்தி வெளிநாட்டவரை வென்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த சக பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மேலும் சிறுமி வெற்றிபெற்றதால் மகிழ்ச்சியடைந்த வெளிநாட்டவர் சிறுமியை தூக்கி வைத்து பாராட்டியதோடு, அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.
வெறும் 7 வயதுடைய அரசுபள்ளி மாணவி செஸ் போட்டியில் வெளிநாட்டவரை தோற்கடித்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!