Sports
காமன்வெல்த் விளையாட்டு போட்டி-இந்திய அணியிலிருந்து தமிழக வீராங்கனை நீக்கம்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. 3வது முறையாக இங்கிலாந்தில் காமன்வெல்த் தொடர்கள் நடக்கவுள்ளன. இந்த தொடரில் கிரேட் பிரிட்டன் முன்னர் ஆண்ட பெரும்பாலான நாடுகள் பங்கேற்கவுள்ளன.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா அதிகம் பதக்கம் வாங்கும் விளையாட்டாக கருதப்படும் சுப்பாக்கி சுடுதல் போட்டி இந்த முறை நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பல ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் கிரிக்கெட் தொடர் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அறிமுகமாகியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை இந்தியா அறிவித்திருந்தது. இதில் தமிழக வீரர்களை தனலட்சுமி 200 மீட்டர் தடகளம் மற்றும், ரீலே போட்டியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் தமிழக வீராங்கனை தனலட்சுமி தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் 2022 காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யாவும் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!