Sports
மீண்டும் உலகளவு ட்ரெண்டிங்கில் 'வாத்தி கம்மிங்'.. டென்னிஸ் ஜாம்பவானை வரவேற்ற விம்பிள்டன்: ரசிகர்கள் குஷி!
கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களில் முதன்மையானதாக கருதப்படும் 'விம்பிள்டன் தொடர்', லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 முறை வெற்றி பெற்று அதிக முறை விம்பிள்டன் தொடரை வென்றவர் என்ற சாதனை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரரையே (Roger Federer) சாரும்.
இந்த நிலையில், விம்பிள்டனின் 100-ஆவது ஆண்டை அனுசரிக்கும் விதமாக ஒரு சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பலரும் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், டென்னிஸ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் என்று சொல்லப்படும் ரோஜர் பெடரர் வருகை தந்தார்.
இவரது வருகையை ரசிகர்கள் மட்டுமே ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்று எண்ணிய நிலையில், தற்போது விம்பிள்டனே எதிர்பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது விம்பிள்டன் தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில், கோட் ஷூட் அணிந்து ஸ்டைலாக நடந்து வரும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து "வாத்தி கம்மிங்" என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்துடன் கூடிய செய்தி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற "வாத்தி கம்மிங்" பாடல் உலக அளவில் வைரலானது. மேலும் இதற்கு பல பிரபலங்கள் வீடியோ செய்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!