Sports
INDvs ENG.. 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாகும் பந்து வீச்சாளர்: நம்பிக்கையை காப்பாற்றுவாரா?
இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்மை தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து மீண்டும் அவருக்கு இன்று கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த முறையும் கொரோனா தொற்று பாசிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இந்த காரணத்தால் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு 1987ம் ஆண்டு கபில் தேவ் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல்முறையாக இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழி நடத்தப்போவதால் அவரின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !