Sports
IPL 2022 : இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டது எப்படி?
2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் முறையை பற்றியை தகவல்களை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த முறை கூடுதலாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால் வழக்கமான முறையிலிருந்து சற்று மாறுதலாக போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
8 அணிகள் பங்கேற்கும் போது ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு தலா 2 முறை மோதும். ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் ஆடும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறும்.
இந்த முறையும் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில்தான் ஆடப்போகின்றன. ஆனால், வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் ஆடப்போகின்றன. புதிதாக 2 அணிகளோடு மொத்தமிருக்கும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளோடு தலா இரண்டு போட்டிகளில் ஆடும். அதேபோல, இன்னொரு பிரிவில் தங்களுக்கு நேர் எதிராக இருக்கும் அணியுடன் இரண்டு போட்டிகளில் ஆடும். மற்ற அணிகளோடு ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடும்.
பிரிவு A இல் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும் பிரிவு B இல் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்திருக்கின்றன.
அணிகளின் கடந்த கால ஐ.பி.எல் பெர்ஃபார்மென்ஸ்களின்படி இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி அதிகப்படியாக 5 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது அதனால் அந்த அணி பிரிவு A இல் முதல் இடத்தில் இருக்கிறது. மும்பைக்கு அடுத்தப்படியாக சென்னை அணி 4 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. அந்த அணி பிரிவு B இல் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் அடுத்து கொல்கத்தா இரண்டு முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. அந்த பிரிவு A இல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணி 1 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. அந்த அணி பிரிவு B இல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இப்படி கடந்த கால பெர்ஃபார்மென்ஸ்களின் படி அணிகளை மதிப்பிட்டு பிரிவுகளாக பிரித்திருக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசன் மார்ச் 26 தொடங்கி மே 29 வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 70 போட்டிகள் நடைபெற இருக்கிறது. லீக் போட்டிகள் அத்தனையும் மும்பை மற்றும் புனேவில் நடக்கவிருக்கிறது. வான்கடே, டி.ஒய்.பாட்டீல், பார்போர்ன், MCA ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கொரோனா பயோபபிள் காரணமாக இப்படி செய்யப்படுகிறது. ஆனால், மும்பை மற்றும் மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமானதாக இருக்கும் என ரசிகர்கள் ஏமாற்றமும் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!