Sports
“2014ல தோனி சொன்னது நினைவிருக்கு..” : கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி பதிவு!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கோலியின் அறிவிப்பு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தோனி முடிவு எடுத்ததால், நீங்கள் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.
அந்த நாளில் தோனியும், நீங்களும் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது உங்களைப் பார்த்து தோனி, உனக்கு இனி சீக்கிரமாகவே தாடி நரைக்கத் தொடங்கும் என்று கேலி செய்தார். அப்போது அனைவரும் சிரித்தோம். அன்று முதல், உங்கள் தாடி மட்டும் நரைக்கவில்லை. அன்று முதல் இன்று வரை உங்களுடைய வளர்ச்சி அபார வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உங்கள் வளர்ச்சி மற்றும் உங்கள் தலைமையின் கீழ் அந்த அணி என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
2014 ஆம் ஆண்டு நீங்கள் கேப்டனாக பதவியேற்று கொண்டபோது, மிகவும் இளமையாகவும் அப்பாவியாகவும் இருந்தீர்கள். உங்களிடம் இருந்த நல்ல எண்ணங்கள்,நல்ல நோக்கங்கள் மட்டுமே உங்களை வாழ்க்கையில் உயர்த்தியது. சவால்கள் உங்களை அடுத்தடுத்து முன்னேற்றியது.
நீங்கள் எதைச் செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும். நீங்கள் பேராசையுடன் இதுவரை எதையும் செய்யவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். இந்த கேப்டன் பதவியும் கூட. அது எனக்குத் தெரியும். ஒரு பொறுப்பு நம்மை இறுக்கிப் பிடித்துகொள்ளும்போதுதான் நம்மை கட்டுப்படுத்தி கொள்கிறோம்.
என் அன்பே, நீங்கள் எல்லையற்றவர். இந்த 7 வருடங்களின் உங்கள் கற்றலை உங்கள் மகள் காண்பாள். நீங்கள் சரியானவற்றையே செய்திருக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பாலிவுட் நடிகையும் தனது காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!