Sports
“என் கடைசி போட்டி சென்னையில்தான்.. ஆனால்..” : ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கூல் கேப்டன் தோனி!
ஐ.பி.எல் 2021 தொடரின் வெற்றிக்கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் சி.எஸ்.கே அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையை முதல்வர் மு.கஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். மேலும், முதல்வரின் பெயரும் 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தோனி.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய CSK கேப்டன் எம்.எஸ்.தோனி, “2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை உடனான உறவு தொடங்கியது. சென்னையில்தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன்.
சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. மற்ற அணியின் வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் அவர்களது சிறப்பியல்பு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக செயல்படாதபோதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்லமுடியாது.” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!
-
“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!
-
“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
-
‘சர்க்காரியா கமிஷன்’ - சட்டசபையில் அன்றே பதில் அளித்த கலைஞர்! (முழு தகவல்)
-
மிசா வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசக் கூடாது : அமைச்சர் நிர்மல்குமாருக்கு, பெ.சண்முகம் கடும் தாக்கு!