Sports
சச்சினுக்கும் இந்த நியூசிலாந்து வீரருக்கும் என்ன தொடர்பு? பெயருக்கான காரணம் தெரியுமா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. நேற்று ஜெய்ப்பூரில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் நியூசிலாந்து வீரர் ஒருவர் இந்திய ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார். இதற்குக் காரணம் அவரின் பெயர்தான். இந்த வீரரின் பெயர் ரச்சின் ரவீந்திரா. இதில் என்ன அப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்களா?. நன்றாக அவரின் பெயரின் முதல் பகுதியைக் கவனித்தாலே தெரியும்.
ஆம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பெயரைக் கொண்டு ரச்சின் என்றும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் நினைவாக ரவீந்திரா என்றும் அவருக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இதனாலேயே இவர் இந்திய ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார்.
ரவீந்திராவின் தந்தை சச்சின் மற்றும் ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகர் என்பதால் தனது மகனுக்கு இந்தப் பெயரை வைத்துள்ளார். இவரது தந்தை 1990களில் பெங்களூருவிலிருந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் ரச்சின் ரவீந்திராவுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்துள்ளது. இதனால் பயிற்சியும் பெற்றுவந்துள்ளார்.
பின்னர் 2016ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவீந்திரா அறிமுகமானார். மேலும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இவர் அணியில் இடம்பெற்றார். ஆனால் போட்டியில் விளையாடுவோருக்கான 15 பேர் கொண்ட குழுவில் இடம் பெறவில்லை.
தற்போது இந்தியாவுடனான டி20 தொடரின் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரச்சின் ரவீந்திரா 338 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !