Sports
"இறுதிவரை RCB வீரன் தான்" : கேப்டனாக கடைசிப் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி உருக்கம்!
ஐ.பி.எல் தொடரில் நேற்று ப்ளே-ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இந்த முறையாவது இறுதிப்போட்டிக்குச் சென்று முதல் ஐ.பி.எல் கோப்பையை வென்றுவிடும் என்ற ஆசையோடு போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
பெங்களூரு அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிக்குச் சென்றது.
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி ஒருமுறைகூட கோப்பை வென்றதில்லை. மேலும், இந்த ஐ.பி.எல் தொடரோடு ஆர்.சி.பி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக ஏற்கனவே தெரிவித்து விட்டார். இதனால் இந்தமுறை கோப்பையை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டார். ஆனால் கோலிக்கு அது கைகூடவில்லை. இதனால் பெங்களூரு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இதையடுத்து ஐ.பி.எல் தொடரின் எனது கடைசி போட்டி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என விராட் கோலி உருக்கமாகப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டி முடிந்து பேசிய விராட் கோலி, "முடிந்தவரை நாங்கள் போராடினோம். ஆனால் மிடில் ஓவர் ஒன்றில் அதிக ரன் கொடுத்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தாண்டு ஆர்.சி.பி கேப்டனாக நான் ஒரு விஷயத்தை முன்னெடுத்தேன்.
நிறைய இளம் வீரர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தேன். 120% சதவீதம் என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். முழு முயற்சியையும் கொடுத்துவிட்டேன். அடுத்த 3 ஆண்டுகளை எதிர்நோக்கியுள்ளேன்.
நான் நிச்சயம் ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவேன். ஐ.பி.எல் தொடரில் எனது கடைசி போட்டி வரை ஆர்.சி.பி அணிக்காக உழைப்பேன்" என உருக்கமாக பேசியுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்களும், பெங்களூரு அணியின் ரசிகர்களும் இந்த பேச்சை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!