Sports
CSK vs MI : ”ரெண்டு கிலோ BP மாத்திரை குடுங்க” - மீம்ஸ் போட்டு ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!
14வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி 29 போட்டிகள் வரை நடந்து முடிந்தது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக அப்போது நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது கடந்த சீசனை போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் தொடங்கிய 30வது லீக் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணி களம் கண்டு வருகிறது.
இதில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தை விளையாடாத காரணத்தால் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார்.
வெகு நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது என்பதோடு சிஎஸ்கே மும்பை அணிகளிடையே போட்டி என்பது இரு அணிகளின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில், எட்டு ஓவர் முடிவில் வெறும் 31 ரன்களை மட்டுமே குவித்ததோடு 4 விக்கெட்டுகளையும் இழந்து சென்னை அணி திணறி வருவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
குறிப்பாக அணியின் கேப்டனான தோனி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், இணையத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!