Sports
கொரோனா மீண்டும் தீவிரமடைவதால் அச்சம்... பாராலிம்பிக்கில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நாடுகள்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த பாராலிம்பிக்ஸ் தொடர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இதற்காகப் பல நாடுகளிலிருந்து வீரர்கள் டோக்கியோவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
டோக்கியோ வரும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.
சமோவா, கிரிபாதி, வனுவாட்டு, டோங்கா, ஓசினி மற்றும் பசிபிக் பொருங்கடல் பகுதியில் உள்ள சிறிய நாடுகள் கொரோனா பரவல் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக பாராலிம்பிக்கில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளதாக சர்வதேச பாராலிம்பிக்ஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கிரேக் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததைப் போல் பாராலிம்பிக்ஸ் போட்டியையும் நடத்தி முடிப்போம் என ஒலிம்பக் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் பாராலிம்பிக்ஸில் தொடர்புடைய 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 54 வீர்கள் டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பனும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!