Sports
க்ருணால் பாண்டியாவால் ஏற்பட்ட சிக்கல்... ரத்தாகிறதா இந்தியா - இலங்கை T20 கிரிக்கெட் தொடர்?
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில் இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதில் இலங்கை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து முதல் டி20 ஆட்டம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்திய அணி வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீரர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அடுத்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!