Sports
#IPL2022- 74 போட்டிகள்.. புதிதாக 2 அணிகள் : அதிரடி மாற்றங்களை செய்த BCCI!
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான 14வது தொடர் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.
பின்னர், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால், ஐ.பி.எல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் 29 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதம் இருக்கும் 31 போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரே இன்னும் முடிவடையாத நிலையில், 2022ம் ஆண்டுக்கான தொடர் குறித்த பேச்சுக்கள் இப்போது துவங்க ஆரம்பித்து விட்டன. மேலும் 2022ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைவதால் 15வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம், மொகா ஏலமாக நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் தொடரில் இதுவரை எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்த நிலையில், 15வது தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 15வது ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளலாம் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதாவது இரண்டு இந்திய வீரர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள், அல்லது மூன்று இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என்ற முறையில் நான்கு வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி.சிஐயின் இந்த அறிவிப்பால் எந்த எந்த நட்சத்திர வீரர்களை எட்டு அணிகளும் தக்க வைக்கப் போகிறது என்ற ஆவல் இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் புதிதாக இணையப்போகும் அந்த இரண்டு அணிகள் எது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும்,ஐ.பி.எல் 15ம் தொடருக்கான மொகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல், இரண்டு பிரிவுகளாக பிரித்து 74 போட்டிகளாக நடத்துவது என்றும், 54 நாளில் முடிய வேண்டிய தொடரை 60 நாட்களாக நடத்தவும் என்றும் பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!