Sports
‘வரும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் இந்த விஷயத்தில் சிரமப்படுவார்கள் !!!’ - ஸ்காட் ஸ்டைரிஸ்
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு துபாய்க்கு மாற்றம் செய்யப்பட்டது எல்லோரும் அறிந்த ஒன்றே. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோத உள்ளன.
கோவிட் 19 நோய் பரவலுக்குப் பின்பாக நடக்கும் பெரும்பாலான விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் காலியான மைதானங்களுடன் நடைபெறுகின்றன. அதே போல் இந்த ஐபிஎல் தொடரும் பார்வையாளர்களின் ஆரவாரமும் கரகோஷமும் இல்லாமல் முதல் முறையாக நடைபெற உள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் பார்வையாளர்கள் இல்லாமல் இருப்பது மற்ற நாட்டு வீரர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால் அது இந்திய வீரர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம்.
இது குறித்துப் பேசியுள்ள அவர் “இந்த விஷயம் வெளிநாட்டு வீரர்களை பெரிதாகப் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. ஏன் என்றால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் சின்ன பார்வையாளர் கூட்டங்களிடையே அல்லது காலி மைதானங்களில்தான் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு அது பழகி இருக்கும். ஆனால் இந்திய வீரர்கள் கடைசியாகப் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடியது எப்போது என்பதை நினைவு கூற முடியவில்லை. அவர்கள் இதனால் திணற மாட்டார்கள் ஆனால் ஆச்சரியமாவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்வையாளர்களிடமிருந்து வரும் அந்த சக்தியை இந்திய வீரர்கள் வேறு வழிகளில் பெற முயல்வார்கள் எனவும் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய வீரர்களுக்கு இது வித்தியாசமாக இருக்கும் ஆனால் அவர்கள் இந்த தொடர் நடைபெறுகிறதே என்பதை எண்ணி மன நிறைவு அடைவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!