Sports
“600 மட்டுமல்ல 700 விக்கெட்டுகளையும் என்னால் வீழ்த்தமுடியும்” - சாதித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ள இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னால் 700 விக்கெட்டுகளை தாண்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக 600-வது டெஸ்ட் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுத்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 4வது அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே(708), அணில் கும்பிளே (619) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ஆண்டர்சென் அடைந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை ஆண்டர்சனே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருக்கிறார். 38 வயதாகும் அவர் தன்னால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர் “நான் மிகக் கடுமையாக என்னுடைய உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நான் என்னுடைய விளையாட்டில் மிகக் கடுமையாகப் பயிற்சி எடுத்துவருகிறேன். நான் விரும்பிய விதத்தில் இந்த காலகட்டத்தில் நான் பந்து வீசவில்லை. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன். இந்த அணிக்குக் கொடுப்பதற்காக இன்னும் என்னிடம் திறமை உள்ளது எனக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “என்னால் தொடர்ந்து விளையாட முடியும் எனத் தோன்றும் வரை நான் விளையாடுவேன். ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரராக நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றுவிட்டதாக நான் எண்ணவில்லை. என்னால் 700 விக்கெட்டுகளை நெருங்கமுடியுமா? ஏன் கூடாது? “ என ஜிம்மி ஆண்டர்சென் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!