Sports
தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் போன்ற விருதுகள் வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு விருது வாங்குவோர் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்திய விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோரில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், இந்திய கிரிகெட் அணியின் வீரர் ரோஹித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீரர் விக்னேஷ் போகத் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியா விருது 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையின் பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தயான் சந்த் விருதும் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ல் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!