Sports
IND vs NZ: முதல் டெஸ்ட் தோல்வி - “இது எங்களின் மோசமான ஆட்டம்தான்” - வருந்திய விராட் கோலி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சு தேர்வு செய்ததால் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
சொந்த மண்ணில் மிகவும் நிதானத்துடன் விளையாடியது நியூசிலாந்து அணி. முதல் இன்னிங்சில் திறம்பட விளையாடிய நியூசிலாந்து அணி, 348 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 89 ரன்களும், டெய்லர், ஜேமிசன் தலா 44 ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
2வது இன்னிங்சில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், 191 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அகர்வால் 58 ரன்கள் சேர்த்தார். இதனால், நியூசிலாந்து அணிக்கு 9 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது.
9 ரன்களை எடுத்த நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்து அணி பதிவு செய்யும் 100வது வெற்றி இது என்பது கூடுதல் சிறப்பு. வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருபுறம் சாதனை படைத்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா பெற்ற முதல் தோல்வி இது.
தோல்விக்கு பிறகு பேசிய விராட் கோலி, “இந்தப் போட்டியில் டாஸ் மிக முக்கியமானதாக இருந்தது. 230 ரன்கள் கூட எடுக்க முடியாததற்கு எங்களின் மோசமான ஆட்டமே காரணம் என நினைக்கிறேன். இது மிகவும் வருத்தமளிக்கிறது. முதல் இன்னிங்ஸின் பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை எடுப்பதுவரை நல்ல நிலையில் இருந்தோம். கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 120 ரன்கள் கொடுத்தது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆட்டத்தில் நன்றாக திறனை வெளிப்படுத்தி தோல்வியை சமன் செய்ய முயற்சிப்போம்.” எனக் கூறினார்.
Also Read
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!
-
கட்டடமாக மாற்றிய நம்பிக்கை : பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ - இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர் !
-
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல : சென்னையில் மினி மின்சார AC பேருந்துகள்!