Sports
‘இது சகோதரப் பாசம்..’ : இந்திய டாக்ஸி டிரைவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தந்த ‘இன்ப அதிர்ச்சி!’
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் செய்த செயல் மற்றவர்களின் மனங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாசிர் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்ட வீரர்கள் பிரிஸ்பேனில் உள்ள இந்திய கால் டாக்ஸி டிரைவர் ஒருவரை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர். டாக்ஸி டிரைவர் வந்ததும் தங்களை ஓர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.
அதன்படி அந்த ஓட்டுநர் அவர்களை இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். உணவகத்தில் பாகிஸ்தான் வீரர்களை இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் அவர்களிடம் கட்டணம் பெற மறுத்துள்ளார். அவர்கள் எவ்வளவோ வற்புறுத்திய அவர் கட்டணம் வாங்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து, தங்களுடன் சாப்பிட வருமாறு டிரைவரை பாகிஸ்தான் வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். வீரர்கள் டிரைவருடன் உணவகத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாகிஸ்தான் வீரர்களின் செயல்களைப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!