Sports
FIFA சிறந்த வீரர் விருதை மீண்டும் வென்ற மெஸ்ஸி... ஆறாவது முறையாகக் கைப்பற்றி அசத்தல் சாதனை!
ஃபிஃபா சிறந்த வீரருக்கான விருதை ஆறாவது முறையாக வென்று அசத்தியுள்ளார் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி.
FIFA எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை, அர்ஜெண்ட்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி பெற்றிருக்கிறார்.
மிலன் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார் மெஸ்ஸி. இதற்கு முன் அவர் இந்த விருதை, 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, உலகின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு செய்யப்படுவது இது ஆறாவது முறை.
46 புள்ளிகளுடன் சிறந்த வீரருக்கான விருதைக் கைப்பற்றினார் மெஸ்ஸி. லிவர் பூல் அணியின் விர்ஜின் வேன் 38 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், யுவண்டாஸ் அணியின் ரெனால்டோ 36 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்தில், தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தில் ஊழல் நடைபெறுகிறது என்று பேசியதற்காக மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!