Sports
வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் - காரணம் இதுதான்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அதைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருந்தார். அப்போது இந்திய ராணுவத்தில் அவர் பயிற்சி பெற்றார். அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான T20 தொடரிலும் தோனி இடம்பெறவில்லை.
இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது. தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில் தோனி விளையாட மாட்டார். இதனால் தோனி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
Also Read
-
செப்.1 முதல் கொள்முதல் விலை அதிகரிப்பு! : விவசாயிகளுக்கான சிறப்பு உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
-
“தமிழ்நாடு மக்களின் அன்போடு புறப்பட்டுச் செல்கிறேன்!” : பயணத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!