Sports
ராணுவ பயிற்சி முடித்து திரும்பிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெறவுள்ளதாக அறிவித்தார். இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடட்டார். கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய தோனியின் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இதையடுத்து தோனி தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பயிற்சியின் போது லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை தோனி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தோனி ராணுவ பயிற்சி முடித்து திரும்பியதை அறிந்த தோனி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!