Sports
“விராட் கோலியிடமும், இந்திய ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்” : ஸ்டெய்ன் சர்ச்சை ட்வீட் !
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
T20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டுப்ளெஸிஸ் நீக்கப்பட்டு, டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக டுப்ளெஸிஸ் நீடிக்கிகிறார். டேல் ஸ்டெய்ன், லுங்கி நிகிடி மற்றும் க்றிஸ் மோரிஸ் ஆகியோருக்கு T20 தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டெய்னுக்கு T20 தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் தேர்வுக்குழு மீது அதிருப்தியில் இருக்கிறார். ரசிகர்கள் பலரும் ஸ்டெய்ன் அணியில் இடம்பெறாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, “நான் தயாராக இருந்தேன். தேர்வு செய்யும்போது பயிற்சியாளர்கள் என்னுடைய பெயரை தொலைத்துவிட்டிருப்பார்கள்” என ஸ்டெயின் ட்வீட் செய்தார். அதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், “புது தேர்வாளர்கள் உங்களை ‘பெரிய’ போட்டிகளுக்காக காக்க வைத்திருக்கிறார்கள்” எனக் கூறினார்.
அதற்கு ஸ்டெய்ன், “இந்திய அணி பெரிய அணி அல்ல என தேர்வாளர்கள் நினைத்ததற்கு விராட் கோலியிடமும், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டெய்னின் இந்திய அணி குறித்த மேற்கண்ட ட்வீட் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஸ்டெய்ன் ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!