Sports

இரண்டாவது ஒரு நாள் போட்டி : இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்!

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் T20 தொடரின் 3 போட்டிகளையும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. மேற்கிந்தியத் தீவுகள் 13 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாடில் இன்று நடைபெறுகிறது.

தொடரை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்கு இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் இடம் பெற்ற வீரர்களே இன்றைய போட்டியிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டி சோனிடென் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியா : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவான், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரி‌ஷப் பண்ட், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ் : ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஆலன், பிராத்வெயிட், கேமர் ரோச், காட்ரெல்.