Sports

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் மும்பை இண்டியன்ஸ் அணியின் உலக ஃபேமஸ் பயிற்சியாளர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோருக்கான விண்ணப்பத்தை பி.சி.சி.ஐ கடந்த வாரம் வெளியிட்டது. தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோதெராபிஸ்ட் உள்ளிட்ட இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், உலகின் தலைசிறந்த பீல்டராகக் கருதப்படும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

49 வயதாகும் ஜான்டி ரோட்ஸ் உலகின் மிகச்சிறந்த பீல்டர் அவர் மும்பை அணிக்காக பல ஆண்டுகள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவி ஜான்டி ரோட்ஸ்க்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மகேலா ஜெயவர்தனே, டாம் மூடி ஆகியோரும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் தற்போது பணியாற்றி வருகிறார்.