Sports

தோனி ஓய்வு பெறவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்: யாரை குறிப்பிட்டு சொல்கிறார் தோனியின் முன்னாள் கோச்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் வலம் வருகின்றன.

இனிமேல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் என்று செய்திகள் வலம் வருகின்றன.

தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி

தோனி 2020 T-20 உலகக்கோப்பை வரை விளையாடவேண்டும் என்று அவரது ரசிகர்களும், தற்போதைய நிலையிலேயே ஓய்வு பெற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனி ஓய்வு பெறுவதையே அவரின் பெற்றோர் விரும்புவதாக தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியுள்ளார்.

தோனி குடும்பம்

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “ தோனி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரின் பெற்றோர் என்னிடம் கூறினர். தோனி அடுத்துவரும் T20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று நான் கூறினேன்” இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.