Sports
யுவராஜ் இருக்க தோனிக்கு கேப்டன் பதவி கிடைக்க காரணம் என்ன? : கிளம்பிய புதிய சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெருவதற்கு முக்கியமாக விளங்கியவர் யுவராஜ் சிங்.
அதன் பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்தும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தான் இடம்பெற வேண்டும் என்பது யுவராஜ் சிங் நினைத்திருந்த வேளையில் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து, விரக்தியாகவும், அதிருப்தியாகவும் இருந்த யுவராஜ் சிங் கடந்த மாதம் தனது ஓய்வை அறிவித்தார். இதற்கு அவரது ரசிகர்கள் பலர் அவரை பாராட்டி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்தாலும், அணியில் இருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டன் தோனிதான் காரணம் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஆமோதித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தோனியின் 38வது பிறந்த நாள் லண்டனில் இந்திய அணி வீரர்களால் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னாள், இன்னாள் என அனைத்து இந்திய அணி வீரர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தனர். யுவராஜ் சிங்கை தவிர.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு மட்டும் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட்களில் தோனி ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தோனி மீது இன்னும் ஏன் உங்களுக்கு கோபம் போன்ற கேள்விகளை முன்வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.
தற்போது, அதனை மிஞ்சும் வகையில் யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் மீண்டும் தோனி குறித்து சர்ச்சையாக பேசியிருக்கிறார். அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தேர்வுக்கு சரியான வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அவருக்கு பதில், பின்னர் வந்த தோனியை கேப்டனாக அறிவித்திருந்தார்கள் என யோக்ராஜ் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!