Sports
இந்திய ஓப்பன் குத்துச்சண்டை: தங்கப்பதக்கம் வென்றார் மேரிகோம் !
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இரண்டாவது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனையான வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி 60 கிலோ எடை பிரிவில் 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?