Sports
எந்த இடத்திலும் களம் இறங்க தயார் - விஜய் சங்கர் தகவல் !
12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன.
இந்திய அணியை பொறுத்தமட்டில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் அபாரமாக இருக்கிறது. அணியில் 4ம் வரிசை வீரராக அம்பத்தி ராயுடுவுக்கு பதில் விஜய் சங்கரை தேர்வு செய்தது தேர்வுக்குழு. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் விஜய் சங்கருக்கு பதில் அம்பத்தி ராயுடுவையே தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறினர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சாதிக்க தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: நான் எதற்கும் தயாராக இருக்கும் போர்க் குணம் கொண்டவன். உலக கோப்பை தொடர் கடுமையான சவால் நிறைந்ததாக இருக்கும்.
4வது இடத்தில் களமிறங்க வேண்டியிருக்கும் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது என்பதை நன்றாக உணர்வேன். என்னை பொறுத்தவரையில் எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமல்ல. அதில் எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம். நாட்டுக்காக விளையாடும் போது அதுவே அதிக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!