Sports
உலகக் கோப்பை 2019 : அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியுடனும் தலா ஒரு முறை மோதும் வகையில் ரவுண்ட் ராபின் முறையில் உலகக்கோப்பை போட்டி நடக்க உள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கான பரிசுத்தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் என அறிவித்துள்ளது ஐசிசி. இந்திய ரூபாய் மதிப்பில் 70 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை இன்று வெளியிட்டது ஐசிசி. இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் லாரின் பாட, ‘ஸ்டாண்ட் பை’ எனும் தலைப்பில் உருவாகியுள்ளது இப்பாடல்.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!