Sports
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சென்னையில் சாலை விபத்தில் பலி!
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் (29) நேற்று அரும்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். நேற்று தனது உறவினர்களைச் சந்தித்து விட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் வழியாக இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, கலவை ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்துக்கடியில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநர் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!