Sports
வெளியேறியது சன் ரைசர்ஸ் : இறுதிப் போட்டிக்கான மோதலில் சென்னை & டெல்லி அணிகள்!
ஐ.பி.எல் 2019 தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 36 (19) ரன்கள் எடுத்தார். மனிஷ் பாண்டே 30 (36) ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 (38) ரன்கள் எடுத்தார். இவருக்கு துணையாக ரிஷப் பன்ட் 49 (21) ரன்கள் எடுத்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, டெல்லி அணி கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. ஒரு பந்து மீதமிருக்க 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து வென்ற டெல்லி அணி குவாலிஃபையர்-2 போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் தோற்றதன் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறியது.
நேற்றைய தினம் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி வரும் மே 10-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் குவாலிஃபையர்-2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!