Sports
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர்!
தாய்லாந்தில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தென் கொரிய வீரர் கிம் இங்கியூவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எளிதில் புள்ளிகளைக் குவித்து அமித் பங்கால் வெற்றிபெற்றார். அமித் பங்கால் இந்த ஆண்டின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஷிஷ் குமார் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை தோற்கடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!