Sports
ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!
ஐ.பி.எல் 2019 தொடரின் இறுதி போட்டி மே 12-ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த ஆண்டின் இறுதிப் போட்டி சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், இட வசதி கருதி போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி போட்டிக்கு மாறாக, முதல் தகுதிப் போட்டி சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தகுதிப் போட்டி மற்றும் வெளியேற்றும் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!