Politics

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு வரவேற்பு - தி.மு.க. தலைவரின் அரசியல் மாண்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க.விடம் தெரிவிக்காமல் கூட்டணி மாறிச் சென்றது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, தி.மு.க. தலைவரும் முன்னணித் தலைவர்களும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், காங்கிரஸின் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளாமல் விலகிச் செயல்பட்டார்.

காங்கிரஸின் வெற்றி - தோல்விகளில் உடனிருந்த தி.மு.க.வுடனான கூட்டணிப் பிணைப்பை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முறித்துக்கொண்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் நலன் கருதி, தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய முடிவை நேற்று (நவ.28) தி.மு.க. அறிவித்தது. இது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்தியா கூட்டணியின் நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டதாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூன்று மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இன்று (நவ.29) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது, காங்கிரஸ் உண்டாக்கிய அரசியல் முரணைக் கருத்தில் கொள்ளாமல், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சிரித்த முகத்துடன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்தச் சந்திப்பில் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றது.

Also Read: சூடு பிடிக்கும் Delimitation விவகாரம்: ஆதரவு தெரிவித்த திமுக.. சென்னையை நோக்கி படையெடுத்த இந்தியா கூட்டணி