Politics
‘எட்டப்பன்கள்’ அல்ல, ‘கட்டபொம்மன்கள்’.. கொள்கையில் சமரசம் இல்லை : ராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பதில்!
இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தி சென்னை செல்கிறோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
மேலும், சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கினை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது நன்றிகள்.
நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழ் மக்களின் நலன்களையுமே முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இந்தக் கொள்கைப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை 'எட்டப்பன்களாக' அல்ல, மாறாக 'கட்டபொம்மன்களாக' அடையாளம் காணும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“Delimitation-ன் பேராபத்தை திமுக தடுத்துள்ளது.. எல்லைச்சாமியாக மு.க.ஸ்டாலின்” : தங்கம் தென்னரசு பேட்டி!
-
மக்களே உஷார்... கோவையில் அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகள்... ஆய்வில் அதிர்ச்சி!
-
தொலைநோக்குப் பார்வையில் மு.க.ஸ்டாலின் : தொகுதி மறுவரையறையில் சரியான நேரத்தில் சரியான முடிவு!
-
தொகுதி மறுவரையறை மசோதா - தி.மு.க. ஆதரிக்கக் காரணம் என்ன? - ஆ.ராசா எம்.பி. விளக்கம்!
-
ஓராண்டாக 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய கலெக்டரின் நேர்முக உதவியாளர்.. திருவள்ளூரில் பரபர!