Politics
“Delimitation-ன் பேராபத்தை திமுக தடுத்துள்ளது.. எல்லைச்சாமியாக மு.க.ஸ்டாலின்” : தங்கம் தென்னரசு பேட்டி!
தொகுதி மறுவரையறைக்கு ஏன் ஆதரவு? திமுக-வின் ஒரே நிலைப்பாடு என்ன? உள்ளிட்டவை குறித்து இன்று (நவ.28) செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதுகுறித்து அவர், தொகுதி மறுவரையறை குறித்து இன்று (நவ.28) திமுக தலைவர் தலைமையில், Fair Delimitation என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது. திமுக எப்போதும் தனது நிலைப்பாட்டில் மாற்றிக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசின் மசோதாவில் திமுக கேட்ட கோரிக்கைகள் / சரத்துகளையும் இணைத்ததாகவும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக உயர இருப்பதாகவும், 7.18 சதவீதம் விகிதாச்சாரத்தில் தான் இருக்கும் என்றும், திமுக முன்வைத்த மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ளாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்ய துணை போகக்கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார்களா அல்லது துரோகம் செய்வதற்கு துணை போகிறார்களா?
இன்றைக்கு காங்கிரஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, delimitation நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் எதிர்காலத்தில் 39 என்ற எண்ணிக்கை 31 ஆக குறையும் நிலை உருவாகும்.
delimitation கொண்டு வந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக இருந்ததால் அன்றைக்கு அதை எதிர்த்தோம். தமிழ்நாட்டின் 7.18 சதவீதத்தில் விகிதாச்சாரம் காக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை. இன்றைக்கு இதை ஏற்று கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எதிர்க்கிறார்கள்.
திமுக இன்றைக்கு இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன சூழல் உருவாகும்?
இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு, விரைவில் மீண்டும் பாஜக delimitation மசோதாவைக் கொண்டு வந்தால் 39 ஆக இருந்த எண்ணிக்கை 31 ஆக குறையும். வரக்கூடிய பேராபத்தை தவிர்க்க தான் திமுக இந்த நிலைப்பாடு எடுத்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வரக்கூடிய பேராபத்தை முன்னே அறிந்து, தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற இந்த முடிவை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பேராபத்தை சந்திக்க நேரிடும் என்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
இன்றைக்கு தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்ற இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 2 முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய மசோதாவை ஆதரிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். நமது கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதற்கு பிறகு தான் இந்த மசோதா ஆதரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக எடுத்த நிலைப்பாட்டால், எதிர்காலத்தில் வர இருந்த ஆபத்தை உணர்ந்து அதை இன்றைக்கே தடுத்து நிறுத்தக்கூடிய எல்லைச்சாமியாக இருந்து தமிழகத்தை காப்பாற்றியவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். இதற்கு மாறாக காங்கிரஸ், தவெக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முயற்சிப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
திமுக தன் நிலைப்பாட்டை மாற்றியதா?
கண்டிப்பாக இல்லை திமுக எப்போதும்Fair Delimitation தான் கேட்டு வருகிறோம். மக்களவைத் தொகை எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக உயர இருப்பதால் இதை ஆதரிக்கிறோம்.
அப்படியானால் U turn அடித்தது யார்?
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைக்க சதி செய்த பாஜக-வை திமுக தான் விடாமல் போராடி என்று U turn அடிக்க வைத்தது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட அனைத்தும் Fair delimitation இல் இருந்து No Delimitation க்கு வந்துள்ளார்கள்.
பாஜக கொண்டு வரும் மசோதாவை ஆதரிப்பதா?
இது தமிழ்நாட்டின் மாநில உரிமைக்கு வந்த முக்கியமான விஷயம். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே சீராக 50 சதவீதம் கூடுதல் தொகுதிகளை பெற முடிந்துள்ளது. இது அனைத்து மாநிலங்களும் கொண்டாட வேண்டிய வெற்றி இந்த வெற்றி உறுதி செய்தவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால்தான் இந்த மசோதாவை ஆதரிக்கிறீர்களா?
அரசியல் கூட்டணிகளுக்கும் இந்திய ஜனநாயகத்தையே பாதுகாக்கும் எத்தகைய முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இந்தியா கூட்டணியில் இருந்த போது ஏப்ரல் மாதமே fair delimitation எனும் முடிவு எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று தான் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.
கூட்டணி என்பது அரசியல். இந்த நிலைப்பாடு என்பது தமிழ்நாட்டின் குரலை மக்களவையில் பிரதிபலிக்க எந்த வகையிலும் குறைத்து விடாமல் இருக்க நமது உரிமையை காக்கும் முயற்சி.
திமுக வந்த நிலைப்பாடு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடா?
இல்லை. எக்காலத்திலும் மதவாத பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எங்கள் தலைவரின் நிலைப்பாடு. 7.18 சதவீதம் பங்கு எப்போதும் குறைய கூடாது. 39 ல் இருந்து 59 ஆக எம்,பிக்கள் எண்ணிக்கை உயரும்.
Fair delimitation க்கு மாற்றாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேறு எதையாவது சொன்னார்களா? மற்ற வட மாநிலங்களில் பாஜகவை சந்திக்க காங்கிரஸ்க்கு தெம்பு இல்லை. ஆனால் திமுக-விற்கு இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழ்நாட்டை மக்களின் மீது அக்கறை இல்லை. வரக்கூடிய ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்
தமிழ்நாட்டிற்கு உடனடியாக என்ன ஆபத்து வரப்போகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கவில்லை.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எப்போது வேண்டுமானாலும் delimitation கொண்டு வரலாம். பாஜக எந்த வடிவத்தில் இந்த மசோதாவை கொண்டு வர நினைத்தாலும் கொண்டு வரலாம். மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரலாம் என்பதை விட, எண்ணிக்கை கூடுகிறதா? குறைகிறதா? என்பது தான்.
நீண்ட கால பிரச்சனையை உருவாக்கக் கூடிய ஒரு விஷயத்தை ஆய்ந்து இந்த முடிவு எடுத்துள்ளோம். எங்கள் இலக்கு தெளிவாக இருக்கிறது.
இந்த ஆபத்து எதிர்காலத்தில் வரும் போது அப்போது திமுக என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்பார்கள். அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஆதரவு.
மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உயர்கிறது. நமது உரிமையை விடக்கூடாது என்பது தான் முக்கியம் எனத் தெரிவித்தார்.
Also Read
-
மக்களே உஷார்... கோவையில் அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகள்... ஆய்வில் அதிர்ச்சி!
-
தொலைநோக்குப் பார்வையில் மு.க.ஸ்டாலின் : தொகுதி மறுவரையறையில் சரியான நேரத்தில் சரியான முடிவு!
-
தொகுதி மறுவரையறை மசோதா - தி.மு.க. ஆதரிக்கக் காரணம் என்ன? - ஆ.ராசா எம்.பி. விளக்கம்!
-
ஓராண்டாக 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய கலெக்டரின் நேர்முக உதவியாளர்.. திருவள்ளூரில் பரபர!
-
“தொகுதி மறுவரையறை மசோதாவில் தி.மு.க முன்வைத்த 2 கோரிக்கைகள்” : MP-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!