Politics

கொலீஜியத்தின் ஒருதலைப்பட்சம் வருத்தமளிக்கிறது! - குடியரசுத் தலைவருக்கு முன்னாள் CJI பி.ஆர்.கவாய் கடிதம்!

நீதித்துறையில் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல் ஆகியவற்றிற்கான கொலீஜியத்தின் அண்மைக்கால பரிந்துரைகள் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும், ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டவை பின்வருமாறு,

இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காடு மட்டுமே இருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உச்சநீதிமன்றத்தின் 40 விழுக்காடு இடத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு முன்பு தண்டனை நோக்கில் பணியிடமாறுதலுக்கு உள்ளான நீதிபதிகள், சிறப்புவாய்ந்த உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பொறுப்பேற்றிருக்கின்றனர்.

கடுமையாக உழைத்து, முறைப்படி தலைமை நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சிறிய உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அண்மையில் கொலீஜியம் முன்வைத்த பரிந்துரைகள், பட்டியலினத்தவர்களையும், சிறுபான்மையினர்களையும், பெண்களையும், இதற பிரிவினரையும் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்விவகாரத்தில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்கிற வகையில், எனது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

Also Read: “இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல்... கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!