Politics
“இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல்... கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தொடர் அழுத்தத்திற்கு பிறகு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
“பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.”
Also Read
-
தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்! : விஜயின் மவுனத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ கைது! - 119 நாட்களுக்கு பிறகு நடவடிக்கை!
-
எதற்காகக் கல்தூணில் தீபம்? - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விடாப்பிடியாக இருக்கும் உச்சநீதிமன்றம்!
-
“முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” : கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!