Politics
எம்.எல்.ஏ. என்பதால் சலுகையா? - அருள் விக்னேஷ் வழக்கில் உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
கள்ளக்குறிச்சி மாவட்டக் கலெக்டர் பத்மஜா-வுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பிய புகாரில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை காவல் துறை உயர் அதிகாரியான ஐ.ஜி நிலையில் உள்ள அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணனன், இந்த விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரனை கோரியிருந்ததை மனுதாரர் சுட்டிக் காட்டினார்.
முதற்கட்ட விசாரணையின் போது மாவட்ட கலெக்டரிடமிருந்து புகார் வரவில்லை என்று காவல் துறை தெரிவித்திருந்தது.
ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், கலெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்தது.
மேலும், சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் என்பதால் கள்ளக்குறிச்சி போலீஸ் எஸ்.பி மேற்கொள்ளும் விசாரணையை ஐ.ஜி நிலையிலான அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது என்றும் நீதிபதி எச்சரித்தார்.
முக்கியமாக, நவம்பர் 27 ஆம் தேதி விசாரணையின் முன்னேற்ற அறிக்கையையும் டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் இறுதி விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
தவெக MLA மீது பெண் ஆட்சியர் புகார்.. இது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? : மு.க.ஸ்டாலின் காட்டமான கேள்வி!
-
TVK MLA விவகாரம் : “அன்று முட்டுக்கொடுத்தீர்களே.. இனியாவது நடவடிக்கை எடுப்பீர்களா?” - கனிமொழி MP கேள்வி!
-
“வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது வெட்கக்கேடு“ : மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க கண்டனம்!
-
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
நீதிபதி கேட்ட கேள்வி.. புகார் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.. தொக்காக மாட்டிய TVK MLA.. விழிப்பிதுங்கும் விஜய்!