Politics
TVK MLA விவகாரம் : “அன்று முட்டுக்கொடுத்தீர்களே.. இனியாவது நடவடிக்கை எடுப்பீர்களா?” - கனிமொழி MP கேள்வி!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து கடந்த ஜூலை மாதமே ஆட்சியர் புகார் அளித்தும் தவெக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆட்சியரின் கணவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, இது முற்றிலும் வதந்தி என்று குற்றம்சாட்டப்பட்ட அருள் விக்னேஷ், தவெக அமைச்சர்கள் என அனைவரும் தெரிவித்ததோடு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், "அருள் விக்னேஷ் பாவம்; எந்த ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் வதந்திகளை வைத்து அவர் மீது விசாரணை நடத்தக் கூடாது" என்று முட்டுக்கொடுத்தார்.
மேலும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்ட அருள் விக்னேஷ் பாதிக்கப்பட்டவர் போல், அவருக்கு விஜய் ரசிகர்கள் முட்டுக்கொடுப்பதோடு, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்கவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் இது தொடர்பான பொதுநல வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் (State Public Prosecutor) ஆர். ஜான் சத்யன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கோ அல்லது தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கோ எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளிக்காத நிலையில், வெறும் செய்தித்தாள் தகவல்களின் அடிப்படையில் காவல்துறை எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் நேரடியாகக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்தார். இந்த விவகாரம் தற்போது பலர் மத்தியிலும் கண்டங்களை எழுப்பி வரும் நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு :-
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.
இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் விஜய், இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Also Read
-
“வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது வெட்கக்கேடு“ : மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க கண்டனம்!
-
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
நீதிபதி கேட்ட கேள்வி.. புகார் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.. தொக்காக மாட்டிய TVK MLA.. விழிப்பிதுங்கும் விஜய்!
-
“கள்ளக்குறிச்சி தவெக MLA-வை கைது செய்து விசாரிக்க வேண்டும்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
ரூ.5 கோடியா... ராஜ்மோகன் மீது ஆளுநரிடம் புகார்... இ.பரந்தாமன் எழுதிய கடிதத்தில் இருந்தது என்ன?