Politics

கோவையில் த.வெ.க நிர்வாகியின் அடாவடி.. “பெரிய ரவுடியாடா நீ” வெளுத்து வாங்கிய பெண்!

கோவை மாவட்டம், வேடப்பட்டி அடுத்த சுண்டப்பாளையத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் (ஏஎன்எஸ் மோட்டார்ஸ்) வைத்திருப்பவர் மகாராசன். இவரிடம் த.வெ.க வேடப்பட்டி நகர செயலாளர் பிரகாஷ், த.வெ.க நிகழ்ச்சிகள் நடப்பதாக கூறி அதற்கான பணம் தர வேண்டும் என அடிக்கடி கேட்டு பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும், ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என பல லட்சங்கள் கொடுத்தாக கூறப்படுகின்றது. அப்போது, த.வெ.க.-வில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக மகாராசன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, த.வெ.க. நிர்வாகி பிரகாஷ் பதவி தருவதாக கூறி அடிக்கடி பணம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றையும் அந்த விற்பனை நிலையத்தில் பெற்றுள்ளார்.

இந்நிலையில், த.வெ.க.-வில் பதவி வாங்கித் தருவதாக பிரகாஷ் அடிக்கடி பணம் பெற்று வருவதை மகாராசன் அமைச்சர் சம்பத் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜ்குமாரிடம் செல்லியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரகாஷ், இவர்கள் கொடுத்த இரு சக்கர வாகனத்தை பதிவு செய்ய வேண்டும் என விற்பனை நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பிரகாஷ் பணம் பறிப்பதை, அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகியிடம் தெரிவித்து விட்டதால், விற்பனை நிலையத்திற்கு வந்த த.வெ.க. நிர்வாகி பிரகாஷ் அங்கிருந்த புதிய இருசக்கர வாகனங்களை தள்ளி விட்டு ரகளையில் ஊடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மகாராசனின் மனைவி திவ்யாவையும் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தின்போது மகாராசனின் மனைவி கடும் கோபத்துடன் பிரகாஷை நோக்கி, “பெரிய ரவுடி போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறா. பணத்தை வாங்கிய அவனே தைரியமாக இருக்கும்போது நமக்கென்ன” என்று தைரியாமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், த.வெ.க நிர்வாகி இருசக்கர விற்பனை நிலையத்தில் புகுந்து பிரச்சினையில் ஈடுபடும் வீடியோ இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.