Politics

“அட்டக்கத்தி முதலமைச்சர் சார்... நடவடிக்கை எடுப்பீர்களா?” : இ.பரந்தாமன் கேள்வி!

“பண்டிகை தினத்தன்று நடந்த 11 கொலைகளைத் தடுக்க துப்பின்றி.. புகார் சொல்லும் பொது மக்களை மிரட்டி வருகிறது த.வெ.க அரசு” என கண்டித்து, தி.மு.கழகச் சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

துறையூர் தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை பற்றி புகார் அளித்தும் த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்காததால், துறையூர் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கிரிடம் புகார் அளிக்க சென்ற கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்கிற சாமானியரை, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரவி சங்கர். அதுபற்றி கார்த்திகுமார் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் தாரரை மிரட்டி மூடி மறைக்க துடிக்கிறார் சோப்ளாங்கி முதலமைச்சர் விஜய்.

ரீல்ஸ்சிலும், சமூக ஊடகங்களிலும் மட்டுமே அரசை நடத்தி வரும் வெத்து த.வெ.க அரசு இதை மூடி மறைக்க, பாதிக்கப்பட்டவரை மிரட்டி 6 take கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் சொல்லியபடி பேசாவிட்டால் குடும்பத்தையே கொன்று விடுவோம் என கார்த்திக் குமாரை மிரட்டி உள்ளனர்.

இது அத்தனைக்கும் த.வெ.க காவல்துறையும் உடந்தையாக இருந்துள்ளது வெட்கக் கேடு. மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி என்பவர் தன்னை மிரட்டி துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்து சென்று வீடியோ எடுத்தாக புகார்தாரர் கூறி உள்ளார். இதுதான் த.வெ.க அரசின் காவல்துறை லட்சணம்.

இரண்டு நாட்கள் முன்பு மதுவிலக்கு காவல்துறையினரே கஞ்சாவை மறைத்து வைத்து மதுக்கடைக்கு எதிராக போராடியவரை கைது செய்ய திட்டம் போட்டு கையும் களவுமாக சிக்கினார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்பார்கள் ஆனால் இன்று த.வெ.க ஆட்சியில் காவல்துறை பொது மக்களின் வில்லனாக மாறி உள்ளது.

பண்டிகை தினத்தன்று பதினோரு கொலைகள் நடந்துள்ளன, அச்சமூட்டும் கொலை செய்திகள் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. அதனை தடுக்க துப்பில்லாத த.வெ.க அரசின் காவல்துறை த.வெ.கவின் அடியாளாக மாறி பொது மக்களை மிரட்டி வருகிறது.

மாற்றம் மாற்றம் என சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கேடு கெட்ட சக்தி தற்போது அவர்களுக்கு வாக்களித்தவரையே அடித்து துன்புறுத்தி உள்ளது.

தொகுதி பிரச்சனைகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் போய் சொல்லுங்கள், அவர்கள் எல்லை சாமி என்றெல்லாம் அள்ளி வீசினார் Dummy CM . தற்போது விஜய் பேச்சை நம்பி போய் பிரச்சனையை சொன்னவரை கடுமையாக தாக்கி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ரவி சங்கர்.

அதோடு பாதிக்கப்பட்டவரையே மிரட்டி அவர்கள் எழுதி கொடுத்த Script யை பேச வைத்து ஒரு விடியோ எடுத்துள்ளனர். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளித்தவரை மிரட்டி புகாரை திரும்ப பெற கூறி உள்ளனர்.

மக்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கோரிக்கை வைத்தாலே தாக்குவது எந்த ஜனநாயகத்திலும் இதுவரை நடக்காத ஒன்று.

ரசிகர் மன்ற டிக்கெட் பிரச்சனைகள் போல மக்கள் பிரச்சனையை திமிர்த்தனமாக கையாண்டு தாக்குவது, அந்த நபரை மிரட்டி பொய் வாக்குமூலம் தர சொல்வது இது தான் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தரும் மாற்றமா சோப்ளாங்கி முதலமைச்சரே?

Extended weekend-ல் offline mode போவதை விட்டு உங்க M.L.A-க்கள் மக்களை நடத்தும் விதத்தை முதலில் பாருங்கள்.

தாக்குதல் நடத்திய த.வெ.க எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், மிரட்டலுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, கைது செய்யுங்கள்.

வெத்து வசனம் பேசி வண்டி ஓட்டி வரும் அட்டக்கத்தி முதலமைச்சர் சார் இந்த சம்பவத்திற்காவது வாயை திறந்து பேசுவீர்களா ? நடவடிக்கை எடுப்பீர்களா?