Politics
முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சையத் முனீர் ஹோதா மறைவு.. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. சையத் முனீர் ஹோதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது இல்லத்திற்குச் சென்று, இறுதி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
1976-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அவர், தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், மாநிலத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, நீண்டகாலம் அரசுப் பணியாற்றியவர். தலைவர் கலைஞர் அவர்களின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவர்; என்னிடமும் அன்பொழுகப் பழகியவர்.
தி.மு.க. ஆட்சியின் சாதனையாக, சென்னை மாநகரத்தின் இரத்தநாளங்களைப் போல் விரிவடைந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதற்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் மேலாண் இயக்குநராகத் திரு. முனீர் ஹோதா அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
நிர்வாகத் துறையில் பல ஆண்டுகால அனுபவம் கொண்ட திரு. முனீர் ஹோதா அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இல்லாத உச்சபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல்... நிர்மல் குமாரின் பொய்கள் : முரசொலி சீற்றம்!
-
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41-க்கு வாங்கும் தவெக அரசு : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!
-
“சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியது சாதாரணமானதல்ல!” : பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
-
Prison Break-உம் தொடங்கிவிட்டது : ஆனோல், முதலமைச்சரோ Sleep Modeல் மட்டும்தான் இருக்கிறார் - DMK IT WING!
-
17 கைதிகள் தப்பியோட்டம்; சிறைத்துறை நிர்வாகத்தின் தோல்விக்கு யார் பொறுப்பு? : எம்.எச்.ஜவாஹிருல்லா கேள்வி!