Politics
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சென்னை தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பருவமழை பாதிப்புகள் ஏற்படும் நிலையிலும், விஜய் தலைமையிலான த.வெ.க அரசு அலட்சியத்துடன் செயல்படுவதால், மின்வெட்டு உள்ளிட்ட சிக்கல்களுக்குள்ளாகி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெறாததால், கடந்த அக்டோபர் 17 - 18 நாட்களில் சென்னையின் சில இடங்களில் மழைநீர் தேங்கி, வெள்ள அபாயம் ஏற்பட்டது.
வடசென்னை பகுதியின் பல்வேறு பகுதிகளில் 24 மணிநேரத்திற்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையின் அளவு குறைந்த பிறகும், மின்வெட்டு தொடர்ந்ததால் சாலைகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில், சென்னை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிற்றரசு, மயிலை த.வேலு உள்ளிட்டோரை அழைத்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக பருவமழைக் காலங்களில் கழகத்தினர் களத்தில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
-
பத்திரிகையாளர்களுக்கு ‘கொ* மிரட்டல்’ விடுத்த த.வெ.க நகரச் செயலாளர் பால்ராஜ்! - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
‘காலி செய்துவிடுவோம்’ : போதைப்பொருள் கடத்தல் செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய தவெக நிர்வாகி!
-
தேர்தல் ஆணையர் நியமன சட்டத்திற்கு ஆதரவளித்தது தவறு: ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம்!
-
“வேட்டைக்காடாக மாறும் தமிழ்நாடு; தூய சக்தி ஆட்சி குற்றவாளிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி” : முரசொலி தாக்கு!