Politics
பத்திரிகையாளர்களுக்கு ‘கொ* மிரட்டல்’ விடுத்த த.வெ.க நகரச் செயலாளர் பால்ராஜ்! - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
நாகை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி பூபாலன் வீட்டில் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போ*ப் பொருள், ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவு பின்வருமாறு,
“வரலாற்றில் இல்லாத அளவுக்கு 137 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை போதைப் பொருள் கடத்தலின் கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.”
Also Read
-
சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
-
‘காலி செய்துவிடுவோம்’ : போதைப்பொருள் கடத்தல் செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய தவெக நிர்வாகி!
-
தேர்தல் ஆணையர் நியமன சட்டத்திற்கு ஆதரவளித்தது தவறு: ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம்!
-
“வேட்டைக்காடாக மாறும் தமிழ்நாடு; தூய சக்தி ஆட்சி குற்றவாளிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி” : முரசொலி தாக்கு!