Politics
“பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் பேராசிரியர் ஜவாஹிருல்லா, கூடுதலாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு,
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலும் - அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் உறுதியான குரலாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணுவதில் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்துவரும் இரு அமைப்புகளின் மக்கள் பணி, தங்கள் அனைவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேலும் வலுப்பெற்று, சமூகநீதியும் சமத்துவமும் தழைக்கும் சமுதாயத்தை உருவாக்கத் துணைநிற்கட்டும்!
Also Read
-
த.வெ.க நிர்வாகி பூபாலன், International Drug Mafia-வானதன் பின்னணி என்ன? - தி.மு.க ஐ.டி அணி கேள்வி!
-
“போதை பொருள் கடத்தலுக்கும், தவெக-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?” - முன்னாள் சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி!
-
“யார்கிட்ட விளக்கம் கேட்க போறாரு?” - இந்து அறநிலையத்துறை Office உள்ளே புகுந்த மழைநீர்.. சேகர்பாபு கேள்வி!
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!